அருமனை மது பாரில்  மோதல் 7 பேர் கைது

கன்னியாகுமரி;

Update: 2025-03-05 14:39 GMT
குமரி மாவட்டம் மேல்பாலை பகுதியை சேர்ந்தவர் லிபின் ஜான் (36). இவருக்கும் செறுவல்லூர் பகுதியை சேர்ந்த அனீஸ் (24) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.       சம்பவ தினம் லிபின் ஜான் தனது நண்பரான மாங்கோடு பகுதி சேர்ந்த அனீஸ் ஜான்  மற்றும் நண்பர்கள் சிலருடன் சிறிய கொல்லையில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடித்துக் கொண்டிருந்தானர்.  அப்போது அங்கு அனீஸ், லிபின் ஜானை தகாத வார்த்தைகள் திட்டி தாக்க முயன்றார். அப்போது இதனை தடுக்க வந்த அனீஸ் ஜானுக்கு அடி விழுந்தது. அவர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.        இதே போல் அனிஸ் தரப்பில் அளித்துள்ள புகாரில் தங்களை லிபின் ஜான் தரப்பினர் தாக்கியதாக புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் விஜயகுமார், ராஜேஷ், ஜான், ஆண்டனி, அனிஷ், ஜான்ராஜ் ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.        நடந்த இந்த மோதலில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டு குழித்துறை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

Similar News