தூத்துக்குடியில் திமுகவினர் 7பேர் வழக்குப் பதிவு
தூத்துக்குடியில் மத்திய அமைச்சரின் புகைப்படத்தை அவமதித்து ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினர் 7பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்;
தூத்துக்குடியில் மத்திய அமைச்சரின் புகைப்படத்தை அவமதித்து ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினர் 7பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது திமுகவினர் மத்திய அமைச்சர் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை அவதூறு செய்ததாக மத்தியபாகம் காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார் செய்தனர். இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக திமுகவினர் 7பேர் மீது சப் இன்ஸ்பெக்டர் முத்துசெல்வி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.