
சேலம் அம்மாபேட்டை போலீசார் தில்லை நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் பள்ளப்பட்டி போலீசார், ராவனேஸ்வரர் நகர் பகுதியில் ேராந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்ற எஸ்.கொல்லப்பட்டியை சேர்ந்த கார்த்தி (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். 2 பேரிடம் இருந்தும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. பள்ளிப்பட்டி பகுதியில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற பாலச்சந்தர் (40) என்பவரை வீராணம் போலீசார் கைது செய்தனர். அன்னதானப்பட்டி, கருப்பூர் பகுதியில் மது விற்ற பழனியம்மாள் (71), சாந்தா (55) ஆகிய 2 பேரை மது விலக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் சூரமங்கலம் போலீசார் குரங்குச்சாவடி ரவுண்டானா பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு குட்கா விற்பனை செய்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பழனிவேலு (47) என்பவரை கைது செய்தனர். அதே போன்று வீராணம் போலீசார், சின்னனூர் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கடையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு குட்கா விற்ற பழனியம்மாள் (59) என்பவரை கைது செய்தனர்.