கோவை: 7 பேருக்கு மறுவாழ்வு வழங்கிய உறுப்பு தானம்!
பொள்ளாச்சியை சேர்ந்த சந்தோஷ் (41) கடந்த 17ஆம் தேதி மூளையில் ரத்த கசிவால், முளைச்சாவு அடைந்த நிலையில் அவர் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது.;
பொள்ளாச்சியை சேர்ந்த சந்தோஷ் (41) கடந்த 17ஆம் தேதி மூளையில் ரத்த கசியால் சுயநினைவை இழந்த நிலையில், கே.எம்.சி.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது பெற்றோர் மற்றும் மனைவி பிரசிதா அவரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க ஒப்புதல் அளித்தனர். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன், அவரது இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் 7 பேர் வாழ்க்கையை மீட்டது. இந்த நிகழ்வை குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் நல்லா ஜி. பழனிசாமி, உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். இது பல உயிர்களை காப்பாற்ற உதவும், எனத் தெரிவித்தார்.