தலைமை தபால் நிலையம் முன்பு 7-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறையினர்.
தலைமை தபால் நிலையம் முன்பு 7-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறையினர்.;
தலைமை தபால் நிலையம் முன்பு 7-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறையினர். வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநில அளவில் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து தர்ணா ஆர்ப்பாட்டம் இன்று நடத்தினர். இதன் தொடர்ச்சியாக கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு அமைப்பின் மாநில துணைத்தலைவர் அன்பழகன் தலைமையில் 7-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர் பொன். ஜெயராம்,உள்ளிட்ட வருவாய் துறை சங்க பொறுப்பாளர்கள் , இருபால் உறுப்பினர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை , நில அளவை துறையில் பணியாற்றும் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் . வருவாய்த்துறை அலுவலர்கள் தாக்கப்படும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும். பொது மக்களுக்கு சிறந்த சேவையாற்ற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களின் பணி சுமையை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.