குற்றாலம் பேரருவியில் 7ஆவது நாளாக குளிக்கத் தடை
பேரருவியில் 7ஆவது நாளாக குளிக்கத் தடை;
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையால் பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீா் தடாகத்தில் சீறிப் பாய்கிறது. இதனால் வெள்ளிக்கிழமை 7ஆவது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இங்கும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புலியருவி, சிற்றருவியில் குளிக்கத் தடை இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் இங்கு உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். நேற்று நாள்முழுவதும் வானம் மேகமூட்டத்துடனும், இதமான சாரல் மழையும்,குளிா்ந்த காற்றும் வீசியது. இருப்பினும், சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருந்தது.