அடிபட்டு கிடந்த மயிலை 7 நிமிடத்தில் மீட்டு வனத்துறைக்கு ஒப்படைத்த அவசர உதவி ஓட்டுநர்!

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கரண்ட் கம்பியில் தாக்கி தேசிய பறவையான மயில் ஒன்று காயமடைந்தது.;

Update: 2025-08-01 10:31 GMT
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கரண்ட் கம்பியில் தாக்கி தேசிய பறவையான மயில் ஒன்று காயமடைந்தது. அதை பார்த்த அப்பகுதியினரின் விழிப்புணர்வினால் உடனே MEDI SQUAD ஆம்புலன்ஸுக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலை பெற்றதும், அந்த ஆம்புலன்ஸின் ஓட்டுநராக இருந்த பிரபத் மிகுந்த நேர்த்தியுடன் செயல்பட்டு, மயிலை வெறும் 7 நிமிடத்தில் மீட்டு, தனது வாகனத்தில் ஏற்றி, கோவை வடகோவையில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றார். வனத்துறை அதிகாரிகள், காயமடைந்த மயிலை பரிசோதித்தபோது, அதன் நெஞ்சு பகுதியில் சிறிய அளவில் காயம் இருப்பது தெரியவந்தது. மயில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், நிலைமை பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மயிலை வேகமாக மீட்டு பாதுகாப்பாக ஒப்படைத்த ஓட்டுநர் பிரபத்தின் செயல்திறன் அனைவராலும் பாராட்டப்படுகிறது.

Similar News