முத்தமிழறிஞர் கலைஞர் 7-ஆம் ஆண்டு நினைவு நாள்!
முத்தமிழறிஞர் கலைஞர் 7-ஆம் ஆண்டு நினைவு நாள்! பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில் அமைதி பேரணி மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கை;
முத்தமிழறிஞர் கலைஞர் 7-ஆம் ஆண்டு நினைவு நாள்! பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில் அமைதி பேரணி! மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கை! பெரம்பலூர்,ஆக,07- தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு வாழ்ந்த தமிழகத்தின் சிற்பி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் நம்மையெல்லாம் விட்டுச் சென்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து ஏழாவது ஆண்டு தினம் (07.08.2025), வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., வழிகாட்டுதல்படி , போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனைக்கினங்க, பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்(எனது) தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில், நாளை வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு,கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் இருந்து அமைதி ஊர்வலமாக வந்து அங்குள்ள டாக்டர் கலைஞர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. அதன் பிறகு 10.30 மணிக்கு, பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய,நகர, பேரூர் கழகச்செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், முன்னாள், இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வார்டு , கிளைக் கழகச் செயலாளர்கள்,கழக முன்னோடிகள்,கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.