கோவை: கலப்பு திருமணம் விவகாரம் – 7 பேர் கைது
கலப்பு திருமணம் செய்த மகளை கடத்த முயன்ற குடும்பத்தினர் கைது.;
கோவை மாவட்டம் சூலூர் அருகே கலப்பு திருமணம் செய்த மகளை கடத்த முயன்ற ஏழு பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சரண்யா (22) மற்றும் அல்லிநகர் விக்னேஷ் கலப்பு திருமணம் செய்து முத்துக்கவுண்டர் புதூரில் வசித்து வந்தனர். நேற்று மாலை சரண்யாவின் தந்தை ஆனந்தன், தாய் லதா, அண்ணன் பிரகாஷ் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் அவர்களின் வீட்டில் வந்து மகளை அழைத்துச் செல்ல முயன்றனர். சரண்யா மறுத்ததால், ஜன்னல்–கதவுகளை உடைக்க முயன்றதாக கூறப்படுகிறது. அருகிலிருந்தவர்கள் தகவல் அளித்ததால் போலீசார் விரைந்து வந்து தேனி மாவட்டத்தை சேர்ந்த இரு பெண்கள் உட்பட 7 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.