கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு 7-வது முறையாக போலி வெடிகுண்டு மிரட்டல் !
மீண்டும் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு.;
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுவரை ஆறு முறை மிரட்டல் வந்த நிலையில், இது ஏழாவது முறை ஆகும். விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது வந்த இந்த மிரட்டலுக்கு, ரேஸ் கோர்ஸ் போலீசார், வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது உறுதியாகி, மிரட்டல் மீண்டும் போலியானது என தெரியவந்தது. குற்றவாளியை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.