குமரி மாவட்டம் பரசேரி - புதுக்கடை சாலை தற்போது அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த சாலையில் உள்ள பல குறுகலான சாலைகள் உடைக்கப்பட்டு புதிய பாலங்கள் அமைக்கப்படுகிறது. இந்த நிலையில் திக்கணங்கோடு சந்திப்பில் உள்ள கால்வாய் பாலம் சீரமைக்க ரூ 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பழைய பாலம் உடைக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ் உள்ளிட்ட வாகன போக்கு வரத்துகள் மாற்றுப்பாதைகளில் இயக்கப படுகிறது. 12 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படும் இந்த பால பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இதற்காக ரெடிமேடு கான்கிரீட் கட்டைகளை ராட்சத கிரேன்கள் உதவியுடன் அமைக்கப்படுகிறது. மேலும் மண் போட்டு நிரப்பும் பணிகளும் நடந்து வருகிறது. 7 நாட்களில் போக்குவரத்து மீண்டும் துவங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.