கரூரில் 7- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர்.

கரூரில் 7- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர்.;

Update: 2025-11-20 12:52 GMT
கரூரில் 7- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர். தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர தர்ணா போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் கிறிஸ்டல் ஹெப்சி தலைமையில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தேவி மாவட்ட பொருளாளர் அன்பரசன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் செல்வராணி மாவட்ட தலைவர் அன்பழகன் ஒரு லிட்டர் சங்க நிர்வாகிகள் செவிலியர்கள் கலந்து கொண்டு மாலை நேர தண்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உச்ச நீதிமன்ற மேல் முறையீடு வழக்கை கைவிட வேண்டும். நடைமுறையில் இருந்து பறிக்கப்பட்ட செவிலியர் கண்காணிப்பாளர் தரம் 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும். தேர்தல் வாக்குறுதி 356 உடனடியாக நிறைவேற்றிட வேண்டும். எம்ஆர்பி தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும். IPHS & NMC விதிகளுக்கு உட்பட்டு மருத்துவத்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்பி விட வேண்டும்.புதிய பணியிடங்களை உருவாக்கிட வேண்டும். தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பினை வழங்கிட வேண்டும். 11 மாத கால ஒப்பந்த பணிமுறையை அறவே ஒழித்திட வேண்டும் எனவும் கோஷங்களை. எழுப்பினர்.

Similar News