கோடங்கிபட்டியில் பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது. ரூ. 700 பறிமுதல்.
கோடங்கிபட்டியில் பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது. ரூ. 700 பறிமுதல்.;
கோடங்கிபட்டியில் பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது. ரூ. 700 பறிமுதல். கரூர் மாவட்டம் தாந்தோணி மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோடங்கிபட்டியில் பணம் வைத்து சூதாடுவதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் க்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 6-ம் தேதி காலை 8 மணி அளவில், கோடங்கிபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருகில் உள்ள முத்தாலம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கோடங்கிபட்டியைச் சேர்ந்த முத்துச்சாமி, மணிகண்டன், குமார், தீபன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ.700-ஐ பறிமுதல் செய்தனர். பின்னர் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.