கவிமணி 71-வது நினைவு தினம்

சுசீந்திரம்;

Update: 2025-09-26 06:37 GMT
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 71-வது நினைவு நாளையொட்டி, குமரி மாவட்டம் சுசீந்திரம் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள, அன்னாரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா இன்று (26.09.2025) மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் கந்தசாமி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செல்வலெட் சுஷ்மா, சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுஷ்யா, துணைத்தலைவர் சுப்பிரமணியபிள்ளை, வருவாய் ஆய்வாளர் பிரேமகீதா, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Similar News