தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

திமுக சார்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கூவத்தூர் கலைஞர் திடலில் ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் தலைமையில் நடைப்பெற்றது.;

Update: 2025-03-28 15:26 GMT
அரியலூர், மார்ச் 29- அரியலூர் மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கூவத்தூர் கலைஞர் திடலில் ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் தலைமையில் நடைப்பெற்றது. முன்னதாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டேவிட் வரவேற்று பேசினார். திமுக தலைமை கழக பேச்சாளர் புதுக்கோட்டை விஜயா, எங்கள் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சரும், அரியலூர் மாவட்ட திமுக செயலாளருமான எஸ் எஸ் சிவசங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.அதனைத் தொடர்ந்து இளம் பேச்சாளர் மோகன்,ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன், திமுக சட்டத்திட்ட திருத்த குழு இணை செயலாளர் சுபா சந்திரசேகர், சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் கலாசுந்தரமூர்த்தி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் தர்மதுரை, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கே.சி.லூயிகதிரவன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பானுமதி ராஜேந்திரன், மாவட்ட மேலிட ஒன்றிய மேற்பார்வையாளர் ரவிக்குமார் உள்ளிட்ட மாவட்ட அணி நிர்வாகிகள், முன்னாள் ஊராட்சி பிரதிநிதிகள், ஒன்றிய அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட பிரதிநிதியும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினருமான சேவியர் சஞ்சீவிகுமார் நன்றி கூறினார்.

Similar News