கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்;
நீலகிரி:- கோத்தகிரி ஒன்றிய திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் - கோத்தகிரி ஒன்றிய திமுக சார்பில் தூய்மை பணியாளர்கள், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய கழக செயலாளர் நெல்லை கண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட அயலக அணி அமைப்பாளர் உமாநாத் வரவேற்றார். நிகழ்ச்சியில், கழக துணை பொதுசெயலாளர் - நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஆ.இராசா அவர்கள், மாவட்ட கழக செயலாளர் கே.எம்.ராஜூ ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் பீமன், சி.பி.ஐ மாநில குழு உறுப்பினர் பெள்ளி, மாவட்ட அமைப்பாளர்கள் சசிகுமார், ராம்குமார், ராஜா, விவேகானந்தன், குன்னூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் சுனிதாநேரு, கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி உட்பட கழக நிர்வாகிகள், அணிகளின் மாவட்ட,ஒன்றிய,பேரூர் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கிளை கழக நிர்வாகிகள்,செயல் வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில், கோத்தகிரி பேரூர் செயலாளர் காளிதாசன் நன்றி கூறினார்.