கரூரில் வண்ண வண்ண கோலங்கள் உடன் 72 ஆவது கூட்டுறவு வார விழா நடைபெற்றது.

கரூரில் வண்ண வண்ண கோலங்கள் உடன் 72 ஆவது கூட்டுறவு வார விழா நடைபெற்றது.;

Update: 2025-11-15 12:16 GMT
கரூரில் வண்ண வண்ண கோலங்கள் உடன் 72 ஆவது கூட்டுறவு வார விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம் தாந்தோணி தொடக்க கூட்டுறவு சங்கம் சார்பில் இன்று சங்க அலுவலகத்திற்கு முன்பு 72 ஆவது கூட்டுறவு வார விழா கொண்டாட்டம் சங்கத்தின் செயலாளர் கமலவேணி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி வட்டார கூட்டுறவு சார்பதிவாளர் சூர்யா சிறப்பு அலுவலர் சந்திரன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள்,ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சங்க அலுவலகம் முன்பு கூட்டுறவு துறையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் கூட்டுறவு கடன்,தாயுமானவர் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான கடன் உதவி திட்டம்,கால்நடை பராமரிப்பு கடன் திட்டம்,நகை கடன் உள்ளிட்ட பல்வேறு சேவை திட்டங்கள் குறித்த விவரங்களை குறிப்பிடும் வகையில் பல்வேறு வண்ண கோலமிட்டு விளக்கம் அளித்து இருந்தனர்.

Similar News