ஆக்கிரமிப்பில் இருந்த 7.43 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு

மீட்பு

Update: 2024-07-28 01:01 GMT
உளுந்தூர்பேட்டையில் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 7.43 ஏக்கர் நிலம் ரோவர் கருவி மூலம் அளவீடு செய்து மீட்டகப்பட்டது. உளுந்துார்பேட்டையில் உள்ள பழமையான சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு 108 ஏக்கர் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கட்டடங்கள் வாடகைக்கு விடப்பட்டாலும், அவை கோவில் பராமரிப்பு பணிகளுக்கு கிடைப்பதில்லை. இந்நிலையில் சுப்ரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்ட செல்லையா, ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் சொத்துக்களை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில் கோவில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்காத இந்து சமய அறநிலை துறை அதிகாரிகளை கண்டித்து இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளர் செந்தில் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் சுப்ரமணிய சுவாமி கோவில் இடங்களை மீட்கும் நடவடிக்கையில் மேற்கொண்டனர்.

Similar News