நடுநிலைப் பள்ளியின் 75 ஆவது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

முன்னாள் மாணவர்கள் முன்னாள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்;

Update: 2025-03-29 15:08 GMT
குன்னூர் நகராட்சிக்குட்பட்ட காந்திபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியின் 75வது ஆண்டு விழா மார்ச் 28ம் தேதி நடைபெற்றது. இவ்விழாவிற்க்கு, வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி, R யசோதா, அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளாகளாக, திருமதி, ப, வனிதா, வட்டார கல்வி அலுவலர். உதகை. மற்றும் , திரு, முரளி மேனன், திருமதி, கல்யாணி மேனன் (Be My Baddy foundation) அவர்களும் கலந்து கொண்டனர். இதில் இப்பள்ளியில் பயிலும் 5, வயது துவங்கி 13 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் தங்கள் திறமைகளை பாடல்கள், நடனம், உரையாடல், நாடகம் என்று வெளிகாட்டி சிறப்பித்தனர். வந்திருந்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளைக் கொடுத்து உற்சாகப்படுத்தினார். இப்பள்ளி ஒரு தனியார் பள்ளிக்கு இணையாகவும், பல்வேறு வசதிகள் செய்யப்பட்டதாகவும், திரு, முரளி மேனன், அவர்கள் பல இலட்சம் ரூபாய் செலவில், பள்ளியின் பாராமரிப்பு பணிகளை செய்து கொடுத்து, கல்வி பயில வேண்டிய அனைத்து உபகரணங்களையும், தந்தது இப்பள்ளிக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது என அவருக்கு பள்ளியின் சார்பாகவும், பெற்றோர்கள், மற்றும் ஆசிரியர்கள் மூலமாகவும் நன்றி தெரிவித்தனர். மேலும், இப்பள்ளி வளர்ச்சிக்கு உதவியாக இருந்த S, S, A உறுப்பினர்களையும் நன்றி கூறி கௌரவிக்கப்பட்டது. இப்படிபட்ட ஒரு தனியார் பள்ளிக்கு இணையாக பள்ளியை உருவாக்க அரும்பாடுபட்ட பள்ளி தலைமை ஆசிரியை, திருமதி, க.கிருஷ்ணவேணி, மற்றும் , திருமதி, சியாமிளா தேவி, பட்டதாரி ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி கூறி கெளரவிக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திருமதி, சங்கரி, பள்ளி மேலாண்மை குழு தலைவி. திரு, முனியாண்டி, பள்ளி மேலாண்மைக் குழுதலைவர். திருமதி, உமா, வினோத் குமார். நகரமன்ற உறுப்பினர். (காந்திபுரம்) திரு, குமரேசன். நகரமன்ற உறுப்பினர் (காட்டேரி, ) திரு.சத்தியநாதன். முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி, புஷ்பா, முன்னாள் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர். திரு, கருணாகரன். தன்னார்வலர். குன்னூர். திரு, விஜயகுமார். ஊர் தலைவர். (காந்திபுரம்) திரு R.டேவிட் . தன்னார்வலர். ( நீ, ம, த, ம, நீதி, பாதுகாப்புச் சங்கம்) திரு, ராஜ பாலா, ஹாக்கி யூனிட் நீலகிரி. அப்துல் கலாம் அறக்கட்டளை, குன்னூர். J.C. i. குன்னூர். ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இறுதியில், க.. கவிதா, பட்டதாரி ஆசிரியை நன்றி கூற பள்ளியின் ஆண்டு விழா இனிதே நடைபெற்றது.

Similar News