மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.7.5 லட்சம் கடனுதவி வழங்கல்

முகாம்;

Update: 2025-08-28 13:16 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், படப்பனார்வயல் அரசன் திருமண மண்டபத்தில், பின்னவாசல், பைங்கால், சொர்ணக்காடு வளப்பிரம்மன்காடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில், "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.  பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக் குமார் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடங்கி வைத்து, அரசு திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசி, பல்வேறு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.7.5 லட்சம் கடன் உதவிகளை வழங்கினார்.  நிகழ்ச்சியில், திமுக பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன்,  பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கர், பேராவூரணி வட்டாட்சியர் சுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், செல்வேந்திரன், காவல்துறை ஆய்வாளர் ஜெகதீசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் பெரியய்யா, ராஜா, இளங்கோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News