நரிக்குடி அருகே 76 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட நியாயவிலை கடை, கலையரங்க கட்டிடத்தை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தெனரசு திறந்து வைத்தார்.
நரிக்குடி அருகே 76 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட நியாயவிலை கடை, கலையரங்க கட்டிடத்தை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தெனரசு திறந்து வைத்தார்.;
நரிக்குடி அருகே 76 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட நியாயவிலை கடை, கலையரங்க கட்டிடத்தை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தெனரசு திறந்து வைத்தார். பெண் குழந்தைக்கு இளமதி என்று பெயர் சூட்டிய நிதியமைச்சர் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூம்பிடகை கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 9.45 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கடை, V.கரிசல்குளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 7.50 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்க கட்டிடம், சேந்தநதி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 7.50 மதிப்பீட்டில் கலையரங்க கட்டிடம், சிறுவனூர் கிராமத்தில் அயோத்திதாசர் பண்டிதர் ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து 25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் கட்டிடம், சிறுவனூர் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 9.77 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை கட்டிடம், நாலூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 6.50 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை கட்டிடம் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 9.77 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட நியாய விலை கடையினை இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். V.கரிசல்குளம் கிராமத்திற்கு சென்ற நிதி அமைச்சர் அங்கு ஒரு பெண் குழந்தைக்கு இளமதி என்று பெயர் சூட்டினார். அப்போது சிறுவனூர், நாலூர் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு சென்று வர எங்கள் பகுதியில் பேருந்து வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும் என நிதி அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். பள்ளி மாணவ மாணவியர்களின் கோரிக்கையை ஏற்ற நிதி அமைச்சர் பேருந்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். உடன் நரிக்குடி முன்னாள் யூனியன் சேர்மன்கள் காளீஸ்வரி சமையவேலு, ஜெயராஜா, ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், ரமேஷ் உட்பட திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.