வரதராஜன்பேட்டை தென்னூர் அன்னை லூர்து பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்,79-வது சுதந்திர தின கொண்டாட்டம்.
வரதராஜன்பேட்டை தென்னூர் அன்னை லூர்து பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்,79-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.;
அரியலூர், ஆக.15- ஆண்டிமடம் அருகே வரதராஜன்பேட்டை தென்னூர் அன்னை லூர்து பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்,79-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் திருச்சி புனித வளனார் கல்லூரி இணைபேராசிரியர் முனைவர் ம.ஜீலியஸ் சீசர்,திருச்சி S.A.S கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் த.ஆரோக்கிய பாண்டியன், பள்ளி தாளாளர் அருட்தந்தை முனைவர் சூ.ஜான் கென்னடி,தலைமையாசிரியை அருட்சகோதரி V.எலிசபெத் ராணி, ஆண்டிமடம் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ரெங்க.முருகன், பேரூராட்சி துணைத் தலைவர் எட்வின் ஆர்தர் மற்றும் வரதராஜன்பேட்டை பேரூர் கழக நிர்வாகிகள்,இருபால் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.