பள்ளியில் இடைநின்ற 8 குழந்தைகள் மீட்பு
உத்திரமேரூரில் பள்ளியில் இருந்து இடைநின்ற இரண்டு பெண், ஆறு ஆண் என, எட்டு குழந்தைகள் மீட்கப்பட்டனர்
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம் கள்ளமா நகர், ஆணைப்பள்ளம், உத்திரமேரூர் நங்கையர்குளம், வாடாநல்லூர் ஆகிய பகுதிகளில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடைநின்ற குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜேஷ் தலைமையில் நேற்று நடந்தது. இதில், பள்ளியில் இருந்து இடைநின்ற இரண்டு பெண், ஆறு ஆண் என, எட்டு குழந்தைகள் மீட்கப்பட்டனர். இதில், குழந்தைகள் உதவி மைய மேற்பார்வையாளர் ராமசந்திரன், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் பிரபாவதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.