சின்ன சேங்கல் 8 புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி.

சின்ன சேங்கல் 8 புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி.;

Update: 2025-04-05 09:33 GMT
சின்ன சேங்கல் 8 புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னசேங்கல் பகுதியில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் தேவைக்கேற்ப புதிய 8 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இன்று கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி இன்று புதிய வகுப்புகளை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்து மாணாக்கர்களின் பண்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவி ராஜா, பள்ளியின் தலைமை ஆசிரியர், பணிபுரியும் இருபால் ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மாணவ- மாணவியர், என ஏராளமானோர் கலந்து கொண்டு வகுப்பறைகள் கட்டிட திறப்பு விழாவை சிறப்பித்தனர். தொடர்ந்து மாணவ- மாணவியரிடம் தமிழக அரசின் திட்டங்களையும் பள்ளிகளுக்காக செய்து வரும் நலத்திட்டங்களையும் எம் எல் ஏ சிவகாமசுந்தரி விரிவாக எடுத்துக் கூறினார். நிகழ்ச்சி நிறைவில் பள்ளியின் முன்பு அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Similar News