அரியலூர் மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்த, ஓய்வு பெற்ற 8 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
அரியலூர் மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்த, ஓய்வு பெற்ற 8 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்தி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.;
அரியலூர், மே. 31- அரியலூர் மாவட்ட காவல்துறையில், சிறப்பாக பணிபுரிந்து பணி ஓய்வில் செல்லவிருக்கும் தூத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பார்த்திபன், குவாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிவண்ணன், ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளவரசன் , ஜெயங்கொண்டம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜ் , கயர்லாபாத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வம் , விக்கிரமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பத்மா, குவாகம் காவல் நிலைய தலைமைக் காவலர் மகேஸ்வரி அவர்கள் மற்றும் மாவட்ட காவல் அலுவலக அமைச்சு பணியக உதவியாளர் கல்யாணகுமார் ஆகியோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் பாராட்டு சான்றிதழ் வழங்கி சால்வை அணிவித்து கௌரவித்தார். மேலும் ஓய்வு பெற்ற காவல் துறையினர், காவல்துறைக்கு பெருமை சேர்த்ததை நினைவு கூர்ந்தார்கள். பணி ஓய்வு பெற்ற காவல் துறையினர் தங்களது உடல் நலத்தையும், குடும்பத்தையும் பேணி காக்க வேண்டும் என அறிவுறுத்தினார். ஓய்வு பெறுகின்ற காவல் துறையினர் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் தன்னை நேரில் சந்தித்து முறையிடலாம் என்றும், மேலும் பணி ஓய்வு பெறுகின்ற காவல் துறையினருக்கு ஓய்வு ஊதியப் பலன்களை விரைந்து வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். .