ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் வடக்கு அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது தென்னந்தோப்பில் உள்ள ஒரு மரத்தில் கதண்டுகள் கூடு கட்டி இருந்தது. இந்நிலையில் தோட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 8 பேரை கதண்டுகள் கடித்தன. இதையடுத்து அப்பகுதி மக்கள் 8 பேரையும் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.