தஞ்சை மாவட்டத்தில், ஏப்ரல்.8, 15, 22 ஆகிய தேதிகளில் மூன்று இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் 

சிறப்பு முகாம் ;

Update: 2025-04-04 16:34 GMT
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு, பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.  இதுநாள் வரை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு 3 கோட்ட அளவிலும் நடைபெறவுள்ளது. 08.04.2025  செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர், மாவட்ட ஆட்சியரக வளாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும்,  15.04.2025 செவ்வாய்க்கிழமை கும்பகோணம், காமராசர் சாலை KMSS வளாகத்திலும், 22.04.2025 செவ்வாய்க்கிழமை பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில்  கிராம சேவை கட்டிடத்தில் நடைபெற உள்ளது.  இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர், மன நல மருத்துவர் மற்றும் கண் மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளார்கள்.   மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் பாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுநாள் வரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகம் மற்றும் 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம்.  இதுநாள்வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு (UDID) விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் மேற்படி முகாமில் மேற்கூறிய ஆவணங்களுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Similar News