தேசிய மாதிரி ஆய்வில் 80 -வது சுற்றுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தகவல்

தேசிய மாதிரி ஆய்வில் 80 -வது சுற்றுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தகவல்;

Update: 2025-08-24 14:58 GMT
மாநில அரசின் பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை அலுவலர்களால் 80வது தேசிய மாதிரி ஆய்வு ஜூலை 2025 முதல் ஜீன் 2026 முடிய உள்ள காலத்தில் முழுமையான உள்நாட்டுச் சுற்றுலா செலவு கணக்கெடுப்பு (Domestic Tourism Expenditure Survey), பற்றிய விவரங்கள் குறித்து 20 நகர்புறபகுதிகளிலும் மற்றும் 17 கிராமப்புறபகுதிகளிலும், ஜூலை 2025 முதல் டிசம்பர் 2025 முடிய உள்ள காலத்தில் இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Unincorporated Sector Enterprises) பற்றிய விவரங்கள் குறித்து 08 நகர்புற பகுதிகளிலும் மற்றும் 08 கிராமப்புறபகுதிகளிலும் மற்றும் ஜூலை 2025 முதல் டிசம்பர் 2025 முடிய உள்ள காலத்தில் காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey) பற்றிய விவரங்கள் குறித்து 12 நகர்புற பகுதிகளிலும் மற்றும் 07 கிராமப்புற பகுதிகளிலும் ஆகிய மூன்று தலைப்புகளில் சமூக பொருளாதார ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. தேசிய பொருளாதாரத்தில் சுற்றுலாவின் முக்கியத்துவம் பன்மடங்கு ஆகும். போக்குவரத்து சேவைகள் மற்றும் இரவு நேர உள்நாட்டுப் பயணம் தொடர்பான விவரங்கள் உள்ளடக்கிய உள்நாட்டு சுற்றுலா செலவினங்கள் குறித்த தரவுகளை சேகரிப்பதற்கும்,கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை கணக்கிடுவதற்கும், இணைக்கப்படாத துறை நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் கட்டுமான நடவடிக்கைகள் குறித்த ஒரு முன்னோடி ஆய்வும் மற்றும் தனியுரிமை, கூட்டாண்மை மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்ற இணைக்கப்படாத நிறுவனங்களின் கட்டுமானப் பணிகளுடன் தொடர்புடைய மொத்த மதிப்பு வெளியீடு (Gross Value Output) மற்றும் மொத்த மதிப்பு கூட்டல் (Gross Value Added) ஆகியவற்றை மதிப்பிடுவதற்கான அத்தியாவசிய தரவுகளை இந்த ஆய்வு சேகரிக்கும். விருதுநகர் மாவட்டத்திற்கு உள்நாட்டுச் சுற்றுலா செலவு கணக்கெடுப்பிற்கு குறையறவாசித்தான்,தம்பிபட்டி,பிள்ளையார்நத்தம், பந்தல்குடி, சாணான்குளம், பேர்நாயக்கன்பட்டி, வெங்கடேஸ்வரபுரம், மேலராஜகுலராமன்(பகுதி), பி.ஆண்டிப்பட்டி, கல்லூரணி, கீழத்திருத்தங்கல், புதுப்பாளையம், ஊமத்தம்பட்டி, வரலொட்டி, தம்மநாயகன்பட்டி, மங்கலம் மற்றும் கலங்காபேரி ஆகிய 17 கிராமப்புற மாதிரிகளிலும், விருதுநகர், செங்கமலநாச்சியார்புரம், பாலையம்பட்டி, படிக்காசுவைத்தான்பட்டி, பள்ளப்பட்டி(2மாதிரிகள்), வத்திராயிருப்பு, இராஜபாளையம்(4மாதிரிகள்), ஆத்திபட்டி(2மாதிரிகள்), ஆமத்தூர்(2மாதிரிகள்), சிவஞானபுரம், சிவகாசி, சித்துராஜபுரம், விஸ்வநத்தம் மற்றும் ரோசல்பட்டி ஆகிய 20 நகர்ப்புற மாதிரிகளிலும், இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பிற்கு கோவிலாங்குளம், நெய்விளக்குநெடுங்குளம், முள்ளிசெவல் (எ) சொக்கலிங்கபுரம், முஸ்டக்குறிச்சி, கம்பிக்குடி, மேலக்கண்டமங்கலம், நதிக்குடி மற்றும் மல்லி ஆகிய 8 கிராமப்புற மாதிரிகளிலும், இராஜபாளையம் (2மாதிரிகள்), விருதுநகர், மம்சாபுரம், சேத்தூர், ரோசல்பட்டி, விஸ்வநத்தம் மற்றும் பாலையம்பட்டி ஆகிய 8 நகர்புற மாதிரிகளிலும், காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பிற்கு வச்சக்காரப்பட்டி, தெற்கு தேவதானம், ஆனையூர்(பகுதி), ரெகுநாதபுரம், வேப்பிலைச்சேரி, வலையபட்டி மற்றும் முள்ளிசெவல்(எ) சொக்கலிங்கபுரம் ஆகிய 7 கிராமப்புற மாதிரிகளிலும், வெங்கடாசலபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருத்தங்கல்(2மாதிரிகள்), விருதுநகர், சாத்தூர்(2மாதிரிகள்), செட்டியார்பட்டி, விஸ்வநத்தம், நாரணாபுரம், பாலையம்பட்டி மற்றும் சேத்தூர் 12 நகர்புற மாதிரிகளிலும் ஆய்வு நடத்தப்பட உள்ளதால், மேற்படி ஆய்வுக்காக துறை சார்ந்த அலுவலர்கள் நேரடியாக ஒவ்வொரு வீட்டிற்கும் விவரங்களை சேகரிப்பதற்காக வரும் பொழுது பொதுமக்கள் உண்மையான புள்ளி விவரங்களை அளித்து, நாட்டின் வளர்ச்சிக்கு உரிய ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. மக்களால் கொடுக்கப்படும் புள்ளி விவரங்கள் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்படும் என்ற உறுதி மொழியும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேலும் குடும்ப வருமானம் அல்லது குடும்ப செலவினம் தொடர்பான விவரங்கள் கேட்கப்படும் போது பொது மக்கள் உண்மையான விவரங்கள் வழங்கவேண்டும் எனவும், திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்த ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஒ.சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

Similar News