காங்கேயத்தில் உங்கள் ஊரில் உங்களைத் தேடித் திட்டம் 800 இடங்களில் கலெக்டர் ஆய்வு

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் உங்கள் ஊரில் உங்களை தேடி திட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட இடங்களில் கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார்

Update: 2024-08-22 05:19 GMT
காங்கேயம் நகராட்சியும் மன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று உங்கள் ஊரில் உங்களை தேடி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாவட்ட அளவிலான சுமார் 44 அரசு துறை அதிகாரிகளைக் கொண்டு 800 இடங்களில் ஒரே நாளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அரசின் அனைத்து நலத்திட்டங்கள் சேவைகளும் தங்கு தடை இன்றி மக்களுக்கு விரைந்து சென்றடைவதை உறுதி செய்திடும் உன்னத நோக்கத்துடன் உங்கள் ஊரில் உங்களை தேடி என்ற திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும் மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டத்தில் தங்கி கள ஆய்வு மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தில் காங்கேயத்தில் நேற்று காலை 9 மணி முதல் ஒரு நாள் முழுவதும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிருஸ்த்துராஜ் ஆய்வு மேற்கொண்டார். இதனை அடுத்து நேற்று மாலை 4 மணியளவில் காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் இடமிருந்து மாவட்ட ஆட்சியர் மனுக்களை பெற்று அதற்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுத்தார். இந்த நிகழ்வில் அனைத்து அரசு துறை சார்ந்த அதிகாரிகளும் அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர். மேலும் நேற்று அரசினர் தங்கும் விடுதியில் தங்கி இருந்த மாவட்ட ஆட்சியர் இன்று அதிகாலை சிவன் மலை கிரிவலப் பாதையில் நடை பயிற்சி மேற்கொண்டார். அவருடன் தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன் ,காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி, காங்கேயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஷ் குமார், சிவன்மலை ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர் .

Similar News