ஸ்ரீராமசந்திரா மருத்துவமனை சார்பில் 800 பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கல்..
ஸ்ரீராமசந்திரா மருத்துவமனை சார்பில் 800 பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கல்..;
சென்னை ஸ்ரீராமசந்திரா மருத்துவமனை சார்பில் ராசிபுரம் பகுதியை சேர்ந்த 800 பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. சென்னை ராமசந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் ராசிபுரம் பகுதியில் ஆண்டுதோறும் இரு நாள் பல்துறை இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இதனையடுத்து, கடந்த செப்.27,28-ல் முகாம் நடத்தப்பட்டது. இதில் பலரும் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கண் கண்ணாடி தேவைப்படுவோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை பூவாயம்மாள் மண்டபத்தில் நடத்தது. இதில் ராமசந்திரா மருத்துவப் பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாஜலம் பங்கேற்று பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார். இதில் பட்டணம் பி.சி.செங்குட்டுவன், மருத்துவர்கள் சம்பாபூரி, தினேஷ், மனோஜ்குமார், மண்டபம் மேலாளர் வாசு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.