சாலைப்புதூர்-ரூ 81.45 லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் ஏலம்.
சாலைப்புதூர்-ரூ 81.45 லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் ஏலம்.;
சாலைப்புதூர்-ரூ 81.45 லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் ஏலம். கரூர் மாவட்டம் நொய்யல் அருகே சாலைப்புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் ஏலம் நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் 22, 550 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர், 495 கிலோ எடை உள்ள தேங்காய்கள் ரூ 5,88,623-க்கு விற்பனையானது. இதே போல 30,590 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய் ரூ. 73,75,971-விற்பனை நடைபெற்றது. இதே போல 2739 கிலோ எடையுள்ள நிலக்கடலை ரூ1,80,656-விற்பனையானது. ஆக மொத்தம் 81,45,250 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.