புனித ஆரோக்கிய மாதா கோவில் 83- ம் ஆண்டு திருவிழா

திண்டுக்கல்லில் புனித ஆரோக்கிய மாதா கோவில் 83- ம் ஆண்டு திருவிழா;

Update: 2025-07-25 19:20 GMT
திண்டுக்கல், அய்யங்குளம் மாதா கோவில் தெருவில் உள்ள புனித ஆரோக்கிய மாதா கோவில் 83- ம் ஆண்டு திருவிழாவில் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் கலந்துகொண்டு ஆலயத்தின் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக புனித கன்னி மாதா உருவம் பொறித்த கொடியானது தெருக்களில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மறை மாவட்ட அதிபரும் பங்குத்தந்தையுமான மரிய இன்னாசி, உதவி பங்கு தந்தை லீனஸ், தூய வளனார் பேராலயம் உதவி பங்குத்தந்தை ஆகியோர்களால் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வான வேடிக்கைகள் முழங்க அன்னையின் கொடி ஏற்றப்பட்டது.

Similar News