பாரிவேந்தர் 85 வது பிறந்தநாள் மரக்கன்றுகள் நடும் விழா.

பாரிவேந்தர் 85 வது பிறந்தநாள் மரக்கன்றுகள் நடும் விழா.

Update: 2024-08-22 08:47 GMT
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பாபுராயன்பேட்டை எஸ்.ஆர்.எம் வேளாண் அறிவியல் கல்லூரியில் பாரிவேந்தர் 85 -வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மேன்மைசால் நிறுவனர் வேந்தர் முனைவர் தா.ரா.பாரிவேந்தர் அவர்களின் 85 வது பிறந்தநாள் விழா எஸ்.ஆர்.எம்.வேளாண் அறிவியல் கல்லூரியில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு எஸ்.ஆர்.எம்.அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் முனைவர் தா.ரா.பாரிவேந்தர் அவர்கள் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார். விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக செந்தமிழன் சீமான் சிறப்புரையாற்றினார். எஸ்.ஆர்.எம்.அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணை வேந்தர் பேராசிரியர் சி.முத்தமிழ்செல்வன் மற்றும் பேராசிரியர் பொன்னுசாமி எஸ்.ஆர்.எம்.அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பதிவாளர் வாழ்த்துரை வழங்கினர். விழா தமிழ்தாய் வாழ்த்தோடு பொறியாளர் அருணாச்சலம் வரவேற்புரை ஏற்று துவங்கியது. எஸ்.ஆர்.எம்.அறிவியல் கல்லூரியின் முதன்மை பேராசிரியர் மு.ஜவஹர்லால் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக 85 மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் 5000 மரக்கன்றுகள் அடுத்து நடப்படும் என்று கல்லூரியின் முதன்மையாளர் உறுதி அளித்தார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக அச்சிறுப்பாக்கம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஒரத்தி கே.கண்ணன், மாவட்ட துணை செயலாளர் டி.வி.கோகுலகண்ணன், ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட துணை அமைப்பாளர் சிவகுமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் வசந்தா கோகுலகண்ணன், பொன்மலர் சிவகுமார், பார்த்தசாரதி, வெளியம்பாக்கம் சிவகுமார், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பெரும்பேர்கண்டிகை சாவித்திரி சங்கர், மின்னல்சித்தாமூர் வழக்கறிஞர் பாலாஜி, பாபுராயன்பேட்டை நவநீதம், கொங்கரைமாம்பட்டு விஜயன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News