வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் விநியோகிக்கும் பணிகள் 85.78 சதவீதம் நிறைவு மாவட்ட ஆட்சியர் தகவல்.
நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் விநியோகிக்கும் பணிகள் 85.78 சதவீதம் நிறைவு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தகவல்.;
இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தினை அறிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 92-இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 2,35,828 வாக்காளர்களும், 93-சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 2,49,377 வாக்காளர்களும், 94-நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் 2,64,052 வாக்காளர்களும், 95-பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில் 2,22,632 வாக்காளர்களும், 96-திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் 2,32,828 வாக்காளர்களும், 97-குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் 2,61,913 வாக்காளர்களும் என 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 14,66,660 வாக்காளர்கள் உள்ளனர்.மேற்படி வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் விநியோகிக்கும் பொருட்டு, 1629 வாக்குச்சாவடி நிலை அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கணக்கெடுப்பு படிவம் விநியோகிக்கும் பணிகள் கடந்த 04.11.2025 அன்று தொடங்கப்பட்டு இப்பணி 04.12.2025 வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்களுக்கு 85.78 சதவீதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் விநியோகிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி சிறப்பு தீவிர திருத்தத்தினை நடத்திட பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.