கரூர் மாவட்டத்தில் 85.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு.

கரூர் மாவட்டத்தில் 85.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு.

Update: 2024-10-11 04:12 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டத்தில் 85.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஒரே சமயத்தில் மூன்று இடங்களில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால், கரூர், சேலம், தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு செய்துள்ளது. அதன் அடிப்படையில் கரூரில் 3.60 மில்லி மீட்டர், அரவக்குறிச்சியில் 7.00 மில்லி மீட்டர், மாவட்டத்தில் அதிகபட்சமாக அணைப்பாளையம் மற்றும் பஞ்சபட்டியில் தலா 22.00 மில்லி மீட்டர்,க. பரமத்தியில் 4.40 மில்லி மீட்டர் கிருஷ்ணராயுபுரத்தில் 2.00 மில்லி மீட்டர், மாயனூரில் 1.00 மில்லி மீட்டர், கடவூரில் 8.40 மில்லி மீட்டர், பால விடுதியில் 5.00 மில்லி மீட்டர், மைலம்பட்டியில் 10.40 மில்லி மீட்டர் என மொத்தம் 85.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானதாகவும், இந்த மழையின் சராசரி அளவு 7.15 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Similar News