ராமலிங்கேஸ்வரர் சௌண்டேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 88 ஆம் ஆண்டு தைப்பூச திருவிழா
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.;
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மன்சுராபாத் அருள்மிகு ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் சௌண்டேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 88 ஆம் ஆண்டு தைப்பூச திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது தைத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தியும் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் கோபுரத்திற்கு மாலை அணிவித்தும் தங்களது வேண்டுதல் நிறைவேற்றி வருகின்றனர் இந்நிகழ்வில் போளூர் மன்ராபாத் பெலாசூர் பாடகம் அணியாலை காம்பட்டு சேத்துப்பட்டு தேவிகாபுரம் கலசப்பாக்கம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.