உத்திரமேரூரில் ரூ. 8.9 லட்சத்தில் பாலுாட்டும் அறை
உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் புதியதாக பாலூட்டும் அறை துவங்கப்பட்டுள்ளது
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில், கடந்த 2015ல் பாலுட்டும் தாய்மார்கள் அறை திறக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது.இந்த பாலுட்டும் அறை போதிய இடவசதி இல்லாமல், சிறிய அறையில் இயங்கி வருகிறது. இதனால், ஒரே நேரத்தில் 5-க்கும் மேற்பட்ட தாய்மார்கள், வரும்போது போதிய இடவசதி இல்லாததால், காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, போதிய வசதியுடன் புதிய பாலுாட்டும் அறையை அமைக்க, தாய்மார்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், பேரூராட்சி பொதுநிதியில் இருந்து, 8.9 லட்சம் ரூபாயில் புதிய பாலுாட்டும் அறை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக, பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.