ஸ்ரீவில்லிபுத்தூரில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 89 வயது மூதாட்டியை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை..*
ஸ்ரீவில்லிபுத்தூரில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 89 வயது மூதாட்டியை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை..*;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 89 வயது மூதாட்டியை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி தேவர் தெருவை சேர்ந்தவர் முத்தம்மாள் 89 வயது மூதாட்டி.இவர் மங்காபுரம் பகுதியில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களை குறி வைத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா என்னும் போதை பொருளை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து மங்காபுரம் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மூதாட்டி முத்தம்மாள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளார் அவரை பிடித்து அவரிடம் இருந்த 900 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் மூதாட்டி முத்தம்மாள் மீது வழக்கு பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மூதாட்டி முத்தம்மாவின் மீது 15க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.