கணவன், மனைவி மீது தாக்குதல்: 9பேர் மீது வழக்கு!
கணவன், மனைவி மீது தாக்குதல்: 9பேர் மீது வழக்கு!;
தூத்துக்குடி மாவட்டம்,சாத்தான்குளம் ஆர்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை மனைவி சுகிர்தா (30.) இவரது கணவர் சின்னத்துரை அதே பகுதியில் உள்ள கோயிலில் விழா கமிட்டி தலைவராக இருந்து வருகிறார். இந்தக் கோயில் கொடை நடத்துவது தொடர்பாக அதே தெருவை சேர்ந்த சின்னத்துரை மகன் பேச்சி முத்து, அவரது சகோதரர் சரவணன் ஆகியோர் கிடையே பிரச்சினை ஏற்பட்டு முன் விரோதம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 25.5.2025 அன்று சின்னத்துரை, அதே கோவில் பகுதியில் நின்றுள்ளார். அப்போது அங்கு வந்த பேச்சிமுத்து, அவரது சகோதரர் சரவணன், உறவினர் கணபதி மகன் மணிகண்டன் ஆகியோர் சின்னத்துரையிடம் கோவில் விழா தொடர்பாக தகராறு செய்து அவரை அவதூறாக பேசி அவரை தாக்கியுள்ளனர். இதனைப் பார்த்த அவரது மனைவி சுகிர்தா, தாக்கப்படுவதை தடுத்து அவர்களைக் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த பேச்சிமுத்து, சரவணன், மணிகண்டன், மற்றும் மனோகரன் மகன் கோபால், ரத்தினசாமி மகன் கார்த்திக், அந்தோணி மகன் அஜின்குமார், முத்து மகன் ஜீவா, இன்னொரு சின்ன துரை மகன் பாஸ்கர், ராமன் மகன்மாதேஷ் ஆகியோர் சேர்ந்து சின்னத்துரையை தாக்கியதுடன் மனைவி சுகிர்தாவையும் தாக்கி உள்ளனர். இதில் கணவன் மனைவிக்கு காயம் ஏற்பட்டதுடன் மனைவி சுகிர்தாவுக்கு குடலிறக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த இருவரும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு நெல்லை மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசில் புகார் அளித்தும், அதற்கான ரசீது வழங்கி விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சுகிர்தா, மாவட்ட எஸ்பி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் புகார் அளித்தார். இதனை அடுத்து சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ஜோசப்கிங், ஐந்து மாதத்திற்கு பிறகு சுகிர்தா அளித்த புகாரின் பேரில் பேச்சிமுத்து, அவரது சகோதரர் சரவணன், மணிகண்டன் உள்பட 9 பேர்கள் மீது 296 (b), 115 (2),118 (1),351 (3) ஆகிய பிரிவின் கீழ் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.