பரமத்தி வேலூரில் ரூ.98.56 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த தமிழக முதல்வர்.
பரமத்தி வேலூர் அருகே ரூ.98.56 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பரமத்தி வேலூர்:14- பரமத்தி வேலூர் வட்டம் குப்புச்சிபாளையம் அருகே உள்ள கவண்டம்பாளைத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில் ரூ.98.56 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா புதன்கிழமை காலை 10 மணியளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த சமுதாய கூடம் 120 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது. முன்னதாக கவுண்டம்பாளையத்தில் நடைபெற்ற விழாவிற்கு நாமக்கல் தி.மு.க மேற்கு மாவட்ட செயலாளர் மதுராசெந்தில் குத்துவிளக்கு ஏற்றி சிறப்புரையாற்றினார். பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராசு முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் வேலூர் நகர செயலாளர் முருகன்,வேலூர் பேரூராட்சி தலைவர் லட்சுமி முரளி,நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சுந்தர் மற்றும் தி.மு.க கழக பேரூராட்சி,ஒன்றியம்,வார்டு கவுன்சிலர்கள்,நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.