தளவாபாளையம் பகுதியில் மாருதி alto கார் தீப்பிடித்து எரிந்து நாசம். போராடி தீயை அணைத்த தீயணைப்பு நிலைய வீரர்கள்.

தளவாபாளையம் பகுதியில் மாருதி alto கார் தீப்பிடித்து எரிந்து நாசம். போராடி தீயை அணைத்த தீயணைப்பு நிலைய வீரர்கள்.;

Update: 2025-04-18 13:51 GMT
தளவாபாளையம் பகுதியில் மாருதி alto கார் தீப்பிடித்து எரிந்து நாசம். போராடி தீயை அணைத்த தீயணைப்பு நிலைய வீரர்கள். கரூர், ராயனூரை சேர்ந்த காமராஜ் என்பவர் தனது மாருதி ஆல்டோ காரை சர்வீஸ் செய்வதற்காக கரூரில் உள்ள ஒர்க் ஷாப்பில் விட்டுள்ளார். சர்வீஸ் செய்யப்பட்ட காரை மெக்கானிக் தனசேகர் என்பவர் ஓட்டி பார்ப்பதற்காக எடுத்து வந்துள்ளார். கரூர்-சேலம் சாலையில் மூலிமங்கலம் பிரிவு வரை சென்ற தனசேகர், காரை திருப்பி சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தளவாபாளையம் பகுதியில் வந்தபோது காரின் முன் பக்கத்தில் புகை வருவதைக் கண்ட அவர் உடனடியாக காரை சாலையின் ஓரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கி உள்ளார். கார் மளமளவென தீப்பற்றி முழுவதும் எரிய தொடங்கியது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்தனர். இருப்பினும் அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது. நெடுஞ்சாலையில் தீ விபத்து நடந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் ஏற்படுத்தியது.

Similar News