கீரமங்கலம் அருகே உள்ள மாங்காடு பகுதியில் வீட்டில் வளர்க்கப்படும் கோழிகளை இரவு நேரத்தில் மர்மநபர்கள் அடிக்கடி திருடி செல்வதாக புகார் எழுந்தது. இந்நிலையில் திருடர்களை கண்டுபிடிப்பதற்காக அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. நேற்று இரவு கோழிகளை பிடிக்கச் சென்ற அடையாளம் தெரியாத நபர் சிசிடிவி கேமராவில் சிக்கிய நிலையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.