கவுண்டம்பாளையத்தில் CPI ஒன்றிய அளவிலான மாநாடு நடைபெற்றது.
கவுண்டம்பாளையத்தில் CPI ஒன்றிய அளவிலான மாநாடு நடைபெற்றது.;
கவுண்டம்பாளையத்தில் CPI ஒன்றிய அளவிலான மாநாடு நடைபெற்றது. கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய அளவிலான மாநாடு பேரூராட்சி கிளை செயலாளர் ராஜேஸ்வரி தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாவட்ட செயலாளர் நாட்ராயன், துணை செயலாளர் மோகன் குமார், நிர்வாக குழு உறுப்பினர் கலா ராணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், புலியூர் பேரூராட்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்கவும், போர்வெலில் கிடைக்கும் நீர் தரமற்றதாக சப்பை நீராக உள்ளதால் மாற்று போர் அமைத்து நல்ல நீர் வழங்க வேண்டும் எனவும், பேரூராட்சிக்குட்பட்ட கோவில் பாளையம், ஓட முடையார் பாளையம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் நடைபெறும் மணல் திருட்டை தடுக்க வேண்டும் எனவும், இந்த மணல் திருட்டில் பேரூராட்சி ஆளுங்கட்சி நிர்வாகிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பேரூராட்சி பகுதிகளில் சாக்கடை வசதிகளை சீரமைக்க வேண்டும் எனவும், இதே போல சின்னமநாயக்கன்பட்டியில் சாக்கடை நீர் தேங்கி கிடப்பதால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால், அதனை சீரமைக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றினர்.