ஆளில்லா பறக்கும் வாகனம் (Drone)

வேப்பந்தட்டை வட்டாரத்தில் கிராமப் பஞ்சாயத்தில் சங்கீதா என்பவருக்கு டிரோன் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விபரங்கள் ஏதுமிருப்பின் 79041 71774 அவரது கைபேசி எண்ணை தொர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.;

Update: 2025-01-28 17:14 GMT
பெரம்பலூர் மாவட்டம் ஆளில்லா பறக்கும் வாகனம் (Drone) மூலம் பயிர்ப் பாதுகாப்புப் பணியினை மேற்கொள்வதற்காக, விவசாயிகள் டிரோன் மகளிரை நேரடியாகத் தொடர்புக் கொண்டு பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல் கிரமாப்புறங்களில் பயிர் சாகுபடியில் பெரும்பாலான பணிகள் பெண்களால் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, பல்வேறு பண்ணை சார்ந்த புதிய தொழில் நுட்பங்களில் முழுமையாக ஈடுபட்டு, அதன் மூலம் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வழக்கமாக நாம் பயன்படுத்தும் தெளிப்பான்களோடு ஒப்பீடு செய்தால், டிரோன் மூலம் மருந்தினை தெளிக்கும்போது, மருந்தின் பயன்பாட்டுத் திறன் அதிகரிக்கிறது. மேலும், தற்போது கிராமப் புறங்களில் வேலையாட்கள் கிடைப்பது குறைந்து வரும் நிலையில், டிரோன் மூலம், குறைந்த நேரத்தில் அதிகமான பரப்பில் மருந்து தெளிக்க முடியும். வழக்கமாக மருந்து தெளிப்பதற்குப் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு டிரோன் பயன்பாட்டில் குறைத்துக் கொள்ளலாம். மேலும், வேலையாட்களின் பணிச்சுமை குறைவதோடு, சாகுபடி செலவும் கணிசமாக குறைகிறது. எனவே, இத்தகைய டிரோன் தொழில் நுட்பத்தினை சுயஉதவிக்குழு மகளிர்களுக்கு கற்றுத்தந்து, அதன் மூலம் அவர்களின் வருமானத்தை உயர்த்துவதற்காக, ஒன்றிய அரசு சென்ற ஆண்டில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு டிரோன் வழங்கும் திட்டத்தினை அறிவித்தது. இத்திட்டத்தில், தமிழ்நாட்டில் 44 சுயஉதவிக்குழு பெண்களுக்கு, டிரோன் குறித்த பயிற்சிதந்து, டிரோன் இயக்குவதற்கான உரிமத்துடன் டிரோன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் டிரோன் மகளிர் தொடர்பான விபரங்கள் உழவர் கைபேசி செயலியில் தனியார் இயந்திர உரிமையாளர்கள் எனும் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எங்கள் மாவட்டத்தில் உள்ளடி டிரோன் மகிளிர் பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ளலாம். பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் வேப்பந்தட்டை வட்டாரத்தில் கிராமப் பஞ்சாயத்தில் சங்கீதா என்பவருக்கு டிரோன் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விபரங்கள் ஏதுமிருப்பின் 79041 71774 அவரது கைபேசி எண்ணை தொர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளலாம். எனவே, விவசாயிகள் தங்கள் தேவைக்கு உழவர் கைபேசிசெயலி மூலமாக டிரோன் மகளிரை நேரடியாகத் தொடர்புக் கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Similar News