கோவை: EA. பழனிச்சாமி கவுண்டர் நினைவு சர்வதேச கராத்தே போட்டி !

தெய்வத்திரு EA. பழனிச்சாமி கவுண்டர் நினைவு சர்வதேச கராத்தே போட்டியை எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்து பரிசுகள் வழங்கினார்.;

Update: 2025-07-29 07:11 GMT
கோவை எல்&டி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் தந்தை தெய்வத்திரு EA. பழனிச்சாமி கவுண்டர் நினைவாக சர்வதேச சிலம்பம் மற்றும் கராத்தே போட்டிகள் நடைபெற்று வருகின்றன. போட்டிகளை எஸ்.பி. வேலுமணி துவக்கிவைத்து, வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள், ரொக்கப்பரிசுகள் வழங்கினார். போதையின் பாதிப்பில் இருந்து இளைஞர்களை பாதுகாக்கும் நோக்கில் நடைபெறும் இப்போட்டிகளில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். வயது, எடை அடிப்படையில் பல பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. பைட்டர்ஸ் அகாடமி மற்றும் ஹாயாசிகா காராத்தே சங்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர் செ. தாமோதரன், முன்னாள் எம்எல்ஏ எட்டிமடை சண்முகம், பலர் கலந்து கொண்டனர்.

Similar News