திமுக அரசு எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு திட்டம் கூட செயல்படுத்தவில்லை என_ EPS
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட ஆலச்சம்பாளையம் அரசு பள்ளி திறப்பு விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட ஆலச்சம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதிகளிலிருந்து 72.85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டிமுடிக்கப்பட்ட நான்கு வகுப்பறை கட்டிடங்கள், கான்கிரீட் சாலை, போர்வெல் சின்டெக்ஸ் டேங்க் உட்பட முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கேற்றியும் துவக்கி வைத்து சிறப்பித்தார்.. அப்போது எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட ஆலச்சம்பாளையம் மாரியம்மன் கோயில் திருடலில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார் அப்போது திமுக அரசு எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை எனவும் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார் அதனை தொடர்ந்து அதிமுக அரசு மட்டும்தான் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த முடியும் என பேசினார். அப்போது எடப்பாடி நகர கழகச் செயலாளர் ஏ எம் முருகன், முன்னாள் நகர மன்ற தலைவர் கதிரேசன், எடப்பாடி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் மாதேஷ், தெற்கு ஒன்றிய செயலாளர் துரை (எ) மாதேஸ்வரன், கொங்கணாபுரம் ஒன்றிய குழு தலைவர் கே கே மணி மற்றும் அதிமுக நகர மற்றும் பேரூர் கழக ஒன்றிய கழகச் செயலாளர் நிர்வாகிகள் என பல கலந்து கொண்டனர்.