துணை முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் E.R ஈஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் VS. மாதேஸ்வரன்.

திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் இ ஆர் ஈஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ் மாதேஸ்வரன் ஆகியோர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆக பதவியேற்றுள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பாராட்டு.

Update: 2024-10-05 11:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ்நாடு துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் உள்ள அமைச்சர் இல்லத்தில் கொமதேக பொதுச்செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான E.R.ஈஸ்வரன் B.E. MLA , பாராளுமன்ற உறுப்பினர் VS.மாதேஸ்வரன் MP நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்வில் மாநில விவசாய அணி இணைச் செயலாளர் திரு சந்திரசேகர், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திரு ராயல் செந்தில், நாமக்கல் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் திரு செந்தில் ராஜா, கொங்கு நண்பர்கள் சங்கத் தலைவர் திரு K.K.ரமேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Similar News