எட்னரல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் GOJUKAN KARATE DO ASSOCIATION OF INDIA மாநில அளவிலான BELT தகுதி தேர்வு
எட்னரல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் GOJUKAN KARATE DO ASSOCIATION OF INDIA மாநில அளவிலான BELT தகுதி தேர்வு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு குமாரமங்கலம் செங்குந்தர் திருமண மண்டபத்தில் கராத்தே பெல்ட் தேர்வு நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி எட்னரல் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைமை பயிற்சியாளர் ஷிகான் சிந்தியா கே.பாபு,கோஜுகான் தமிழ்நாடு பொதுச்செயலாளர் அவர்கள் தலைமையில் சென்சாய் பாஸ்கரன், சென்சாய்குழந்தைவேல் சென்சாய் வினோத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பயிற்சியாளர்கள் சங்கமி, சபரிநாதன், முத்துகுமார் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். சிறப்பு விருந்தினராக குமாரமங்கலம் நாட்டாமைக்காரர் வடிவேல் , கோஜிக்கான் தமிழ்நாடு பிஆர்ஓ Sensai ரெதீஷ் குமார் விஷ்ணு வித்யாலயா பள்ளி vice principal திருமதி தனலட்சுமி, சங்கமி ஸ்வீட்ஸ் மாரியப்பன், ராதாகிருஷ்ணன் மற்றும் சிறப்பு அழைப்பாளராக வெற்றி OSS தாளாளர் முருக பூபதி கலந்துகொண்டு பெல்ட் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் கராத்தே தற்காப்பு செயல்முறை விளக்கங்களை மாணவர்கள் செய்து காண்பித்தனர். Gojukan தமிழ்நாடு தலைவர் S.A. நாவலன் மற்றும் Gojukan தமிழ்நாடு துணைத் தலைவர் ராஜா மாணவர்களுக்கான விளையாட்டுத்துறை ஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வு வழங்கினர். பெல்ட் தகுதி தேர்வில் கோபிகிருஷ்ணன், முகுந்தன், கிஷோர், நகுள்சரண் ஆகியோர் பிளாக் பெல்ட் பட்டம் வென்றனர். பெற்றோர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் மாணவர்களை மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்தினார்கள்.