புதிய காவல் நிலைய கட்டிடத்திற்கு இரயில்வே பாதுகாப்பு படையின் டைரக்டர் ஜென்ரல் மனோஜ் யாதவ் IPS. அடிகல் நாட்டினார்.

தமிழ்நாடு காவல் துறை மற்றும் இரயில்வே பாதுகாப்பு படையின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்;

Update: 2025-03-19 04:47 GMT
  • whatsapp icon
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இரயில்வே பாதுகாப்பு படைக்கு புதிய காவல் நிலைய கட்டிடத்திற்கு இரயில்வே பாதுகாப்பு படையின் டைரக்டர் ஜென்ரல் மனோஜ் யாதவ் IPS. அடிகல் நாட்டினார். யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் நீலகிரியின் பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது.இந்த ரெயிலில் பயணிக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் இன்று இரயில்வே பாதுகாப்பு படை புதிய காவல் நிலைய கட்டிடத்திற்கு இரயில்வே பாதுகாப்பு படையின் டைரக்டர் ஜெனரல் மனோஜ் யாதவ் IPS அடிக்கல் நாட்டினார். பின்பு குன்னூரில் இருந்து சிறப்பு மலை இரயில் மூலம் மேட்டுப்பாளையம் சென்றார்.இந்த நிகழ்சியில் தமிழ்நாடு காவல் துறை மற்றும் இரயில்வே பாதுகாப்பு படையின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Similar News