உறுப்பு தானம் செய்த சசிகுமார் குடும்பத்தினருக்கு மரியாதை – KG மருத்துவமனையில் அஞ்சலி !
பலருக்கு புதிய உயிர் வழங்கிய சசிகுமார் – குடும்பத் தீர்மானத்துக்கு பாராட்டு.;
கோவை திருமலையம்பாளையத்தைச் சேர்ந்த சசிகுமார் (46) தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு KG மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். துயரத்தை மீறி, சசிகுமார் குடும்பத்தினர் அவரது இதயம், சிறுநீரகம், நுரையீரல், கண்களை தானமாக வழங்கினர். இதனால் பலருக்கு புதிய உயிர் கிடைத்தது. மருத்துவமனை தலைவர் டாக்டர் ஜி. பக்தவசத்சலம், மருத்துவர்கள், செவிலியர்கள், குடும்பத்தினர் இணைந்து மலர் அஞ்சலி செலுத்தினர். சசிகுமார் குடும்பத்தின் இந்த மனிதநேய செயல், சமூகத்தில் உறுப்பு தானம் செய்யும் மனப்பாங்கை ஊக்குவிக்கும் முன்னுதாரணமாகப் போற்றப்படுகிறது.